2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் கழகங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 மே 07 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, கே.எஸ்.வதனகுமார்)

24வது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு பிரதேச மட்ட  இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியானது இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இளைஞர் சேவை அதிகாரி நா.குகேந்திரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம  அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் கலந்துகொண்டதுடன் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, உதவிப் பணிப்பாளர் ஜனாப் ஏ.ஜே. அப்துல் கபூர், பிரதேச செயலாளர் எஸ்.ராகுலநாயகி, வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித்தரத்தன, கதிரவெளி இராணுவமுகாம் பொறுப்பதிகாரி லெப்ரினன்ட் ஜெ.குமாரசிங்க, கதிரவெளி கிராமசேவை உத்தியோகஸ்தர். கே.யோகசாகரன், இலங்கை இளைஞர்கழக சம்மேளன செயலாளர் சமன்குமார ரணவீர, இ.இ.க.ச. பொருளாளர் ஆர்.எ.சுதிரராஜபக்ஷா,  பிரதேச சம்மேளன தலைவர் கே.ஜெபகுமார்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கபடி, வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், எல்லே, கிரிக்கெட், காற்பந்து  மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றிபெற்ற கழகங்களுக்கான கேடயங்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

இப்போட்டியில், 156 புள்ளிகளைப் பெற்று கதிரவெளி விக்னேஸ்வரா இளைஞர் கழகம் முதலாம் இடத்தையும் 146 புள்ளிகளைப் பெற்று புச்சாக்கேணி விபுலானந்தா இளைஞர்கழகம் இரண்டாம் இடத்தையும், 48 புள்ளிகளை பெற்று நாகபுரம் விநாயகர் இளைஞர் கழகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X