2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி வெற்றி

Kogilavani   / 2012 மே 08 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே இடம்பெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இப் போட்டி புத்தூர் ஆவரங்கால் நடராசா இராமலிங்கம் வித்தியால மைதானத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியும் கோப்பாய் பிரதேச செயலக அணியும் மோதிக்கொண்டன.

ஐந்து சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியில் முதல் சுற்றை தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 25:13 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.

இரண்டாம் சுற்றை கோப்பாய் பிரதேச செயலக அணி 25:18 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெ;றறி பெற்றது.

மூன்றாம் நான்காம் சுற்றுக்களை தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 25:19, 25:20 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்று யாழ்.மாவட்ட பெண்கள் கரப்பந்தாட்ட சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்டது. 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X