2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வலி- தென்மேற்கு இளைஞர் கழக விளையாட்டுப்போட்டி

Kogilavani   / 2013 ஜூன் 13 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

வலி – தென்மேற்கு இளைஞர் கழகங்களுக்கு இடையிலான தடகள விளையாட்டுப்போட்டிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இளவாளை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தடகளப் போட்டிகளின் முதல் போட்டியான சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டமும் பெண்களுக்கான 5 மீற்றர் ஓட்டமும் இடம்பெறவுள்ளன.

நெடுந்தூர ஓட்டப்போட்டிகளில் பங்குபற்றும் போட்டியாளர்கள் மருத்துவப் பரிசோனை அறிக்கை கட்டாயமாகக் கொண்டு வரவேண்டும் என்று வலி – தென்மேற்கு பிரதேச இளஞைர் கழக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X