2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிறாஸ்கோப்பர் அணி காலிறுதிக்குத் தகுதி

Kogilavani   / 2013 ஜூன் 14 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில்; யாழ்.மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் 50 பந்துபரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் கிறாஸ்கோப்பர் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற, காலிறுதித் தெரிவிற்கான போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய (கே.சி.சி.சி) அணியினை எதிர்த்து கிறாஸ்கோப்பர் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, 32 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.

வல்லவக்குமரன் 77 ஓட்டங்களையும் இராகுலன் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் கிறாஸ்கோப்பர் அணி சார்பாக சரண்ராஜ் 5 இலக்குகளை வீழ்த்தினார்.

181 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கிறாஸ்கோப்பர் அணிக்கு, முதல் விக்கெட் இணைப்பாட்டமாக டிலோசன் - காந்தசீலன் 177 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியினை இலகுபடுத்தினர்.

கிறாஸ்கோப்பர் அணி 36 பந்துபரிமாற்றங்களில் 2 இலக்குகளை மாத்திரம் இ.ழந்து வெற்றிpயலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் டிலோசன் 86, காந்தசீலன் 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X