2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்தாட்டத்தில் கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியன்

Kogilavani   / 2013 ஜூன் 20 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்காரவேலு சசிக்குமார்

கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் நடத்தும் 18ஆவது மாகாண நிலை போட்டியின் பெரு விளையாட்டு போட்டிகள் உதவிக் கல்வி பணிப்பாளர் ஜெ.உதயரெட்ணம் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றன.

19 வயது ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில், கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியன் நிலையினை அடைந்தள்ளது.

நேற்று புதன்கிழமை சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரண்டாம் இடத்தினை கல்முனை அல்.சம்ஸ்  கல்லூரியும் மூன்றாம் இடத்தினை திருகோணமலை முள்ளிப்பொத்தாணை அல்ஹிஜ்ரா வித்தியாலயமும் பெற்றுகொண்டுள்ளன.

17 வயது  பிரிவினருக்கான கால்பந்தாட்ட போட்டியில் கிண்ணியா அல் அக்ஷா கல்லூரி சம்பியன் நிலையினையும் பட்டிருப்பு மண்டூர் 14 அரசினர் தமிழ் கலவின் பாடசாலை இரண்டாம் இடத்தினையும் பெற்றகொண்டுள்ளது.

மூன்றாம் இடத்துக்கான போட்டி இன்று வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X