2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஞானமுருகன், பாடும்மீன் நீலம் அணிகள் இறுதிப்போட்டியில்

Kogilavani   / 2013 ஜூன் 20 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


மகிந்தன் வெற்றிக்கிண்ணத்திற்காக நடைபெற்று வந்த கால்ப்பந்தாட்ட அரையிறுதிப் போட்டிகளில் ஞானமுருகன், பாடும்மீன் நீலம் அணிகள் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளன.

யாழ்ப்பாண கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் அங்கத்துவக் கழகங்களின் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியின், முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் அணியினை எதிர்த்து பாடும்மீன் நீல அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் ஆட்டத்தின் பெரும் பங்கை தன்வசம் வைத்திருந்த ஞானமுருகன் அணி அடுத்தடுத்து மூன்று கோல்கள் போட்டது.

பதிலுக்கு பாடும்மீன் நீல அணி ஒரு கோல் போட, முதல் பாதியாட்டம் 3:1 என்ற கோல் கணக்கில் ஞானமுருகன் முன்னிலையில் முடிவுற்றது.

ஆட்டநேர முடியும் போது ஞானமுருகன் அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் ஊரெழு றோயல் அணியினை எதிர்த்து பாடும்மீன் மஞ்சள் அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒரு கோல் பெற்று சமநிலையில் இருந்தன.

இரண்டாவது பாதியாட்டம் விறுவிறுப்பாக அமைய, இரு அணிகளும் மாறிமாறி ஒரு கோலினைப் பெற்று சமநிலையில் நீடித்தன. ஆட்டநேரம் முடியும்போது இரு அணிகளும் 2:2 என்ற கோல் கணக்கில் சமநிலையிலிருந்தன.

வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் பாடும் மீன் மஞ்சள் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X