2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களுக்கு வழங்கப்பட்ட தொகை அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ்


கடந்த காலங்களில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் பிரதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களுக்கு வருடாந்தம் வழங்கப்பட்டு வந்த 25,000 ரூபா எதிர்வரும் காலம்  தொடக்கம் 100,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் றொட்றிக்கோ தெரிவித்தார்.

புத்தளம் கால்பந்தாட்ட கழகங்களுக்கு கால்பந்துகளினை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விரைவில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் சவால் வெற்றிக்கிண்ண போட்டி புத்தளத்தில் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெரும் அணிக்கு 25,000 ரூபா பணமும், சவால் கி;ண்ணமும் தனது சொந்த பணத்தில் வழங்கப்படுமென இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் றொட்றிக்கோ மேலும் தெரிவித்தார்.

இதன்போது புத்தளம் பாடசாலைகளின் கால்பந்தாட்ட அணிகளுக்கும் பந்துகள் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X