2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.ஷாஜஹான்   
    

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரிக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் நேற்று திங்கட்கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டன.

நீர்கொழும்பு மாநகர சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எம்.ஓ.எம். ஹீசானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

கல்லூரி அதிபர் என்.கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சாபி ரஹீமும் கலந்துகொண்டார்.

இதன்போது, கரம், கிரிக்கட், கரப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களுக்கான உபரணங்கள் வழங்கப்பட்டன.

இதேவேளை, மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் இக்கல்லூரிக்கு முச்சக்கர வண்டி ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X