2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் போட்டியில் நோமன்ஸ் கழகம் வெற்றி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 30 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய  50 பந்து பரிமாற்றம் கொண்ட போட்டியில் நோமன்ஸ் கழகம், ஈச் விளையாட்டுக் கழகத்தை 83 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.

ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இந்தப் போட்டி நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நோமன்ஸ் கழகம், ஈச் கழகத்திடம் களத்தடுப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.

நோமன்ஸ் கழகம் 49ஆவது பந்து பரிமாற்ற முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 273 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது. கு.சக்திபிரணவன் 78 ஓட்டங்கள்,  டிக்சன் 51 ஓட்டங்கள், கு.சக்திகுமரன் ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்கள்,  கமிலஸ் பிரியானந்த 33 ஒட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஈச் சகழத்த்தின் சார்பில் இப்திகா  32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கிசான் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும்;  பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு களம் புகுந்த ஈச் விளையாட்டுக் கழகம் 34ஆவது பந்து பரிமாற்ற நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X