2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வெளிக்கள பயிற்சி

Kogilavani   / 2013 ஜூலை 02 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


பாடசாலைகளிலுள்ள உடற்கல்வி பாடத்திட்டத்தின் வெளிக்கள பயிற்சிநெறி ஒன்று மட்டக்களப்பு – திக்கோடை தளவாய் காட்டில் நடைபெற்றது.

கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமான இப்பயிற்சி நெறியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.  

மட்.திக்கோடை கணேச வித்தியாலய அதிபர் ம.கங்காதரன் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர் த.திவ்வியராசாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் 100 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதில், போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டத்திலுள்ள மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மட்.தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம், மட்.திக்கோடை கணேச வித்தியாலயம், மட்.மண்டூர் நாற்பதாம் கிராம அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இச்செயற்பாட்டின் மூலம் மாணவர்களின் ஆளுமை விருத்தி, தலைமைத்துவம், முதலுதவி, முடிவெடுக்கும் திறன், சுகாதார நற்பழக்கவழக்கங்கள், பங்கேற்கும் தன்மை போன்ற பல விடயங்கள் பற்றி மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் 'சாவல்களை எதிர்கொள்ளக் கூடிய நாளைய தலைவர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்' எனவும் இதன் ஏற்பாட்டாளரும் உடற்கல்வி ஆசிரியருமான த.திவ்வியராசா தெரிவித்தார்.

மேற்படி 100 மாணவர்களும் தளவாய் காட்டில் 3 நாட்கள் தங்கியிருந்து இப்பயிற்சியினையும் பல அனுபவங்களையும் பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X