2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கராத்தே போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் வெற்றி

A.P.Mathan   / 2013 ஜூலை 02 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்
 
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான கராத்தேப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் வெற்றிபெற்றுள்ளது.
 
கிழக்கு மாகாண மட்டக் பெண்கள் பிரிவினருக்கான கராத்தேப் போட்டி கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் ஒத்துழைப்போடு மட்டக்களப்பு சென் மைக்கல் தேசிய கல்லூரியில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் இடம்பெற்றது.
 
இப் போட்டியில் மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து 14, 15, 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான போட்டிகள் இடம்பெற்றன.
 
இப் போட்டியில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி முதலாமிடத்தினையும் மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் மட்டக்களப்பு முறக்கட்டான்சேனை இராமக் கிருஸ்ண மிசன் பாடசாலை மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராமக் கிருஸ்ண மிசன் பாடசாலை என்பன மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளன.
 
இந் நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வ.லவக்குமார், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரகுமார், திருகோணமலை கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜாகூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X