2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

துடுப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கு அணி வெற்றி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 04 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகருணாகரன்


கிளிநொச்சியில் 19 வயதின் கீழ்ப் பிரிவுக்கான 20 க்கு 20 துடுப்பாட்டப் போட்டியில் இலங்கையின் வடக்கு, கிழக்கு அணி அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்து வெற்றியீட்டியுள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் வடக்கு, கிழக்கு அணிக்கும் அவுஸ்திரேலிய மெல்பேர்ண் அகடமி அணிக்குமிடையில் 20 க்கு 20 துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் முழு விக்கெட்டுக்களையும்; இழந்து 117 ஓட்டங்களை மட்டும் பெற்றிருந்தது.
வடக்கு, கிழக்கு அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

இதனையடுத்து வடக்கு, கிழக்கு அணியின் விளையாட்டு வீரர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கும் இலங்கை துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவின் ஏற்பாட்டில் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X