2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைகளுக்கு இடையில் தடகளப் போட்டிகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 04 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன், சுமித்தி தங்கராசா


வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை  ஆரம்பமாகியுள்ளன.

வடமாகாண கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில்; ஆரம்பமான இந்;த தடகளப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டார்.

தொடர்ந்து 5 நாட்களுக்கு தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளன.  தடகளப் போட்டிகளின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் 8ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X