2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கூடைப்பந்து, மேசைப்பந்து போட்டிகளில் கொமர்ஷல் கிரெடிட் அணிகள் வெற்றி

A.P.Mathan   / 2013 ஜூலை 05 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த ஜூன் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒட்டர்ஸ் கோர்ட்டில் நடைபெற்ற 'ஏ' பிரிவு வணிக சேவைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் கொமர்ஷல் கிரெடிட் வெற்றியீட்டியுள்ளது. யூனியன் அஷுரன்சுக்கு எதிரான கடைசிப் போட்டியில் 63இற்கு 53 என்ற புள்ளி அடிப்படையில் இந்த வெற்றி கிட்டியது.
 
அதே வாரத்தில் கல்கிசையில் அமைந்துள்ள புனித தோமஸ் கல்லூரியில் நடைபெற்ற 'பி' பிரிவு வணிக சேவைகளுக்கிடையிலான மேசைப்பந்து போட்டித்தொடரில் சிங்கர் ஸ்ரீலங்கவை மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் கொமர்ஷல் கிரெடிட் வெற்றியீட்டியது.
 
2011இல் 'டி' பிரிவில் எல். பி. பினான்சை வெற்றியீட்டியது தொடக்கம் கொமர்ஷல் கிரெடிட் கூடைப்பந்து அணி வெற்றிகளைக் குவித்து வருகின்றது. கடந்த வருடம் 'பி' பிரிவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்சை வெற்றியீட்டி இவ்வருடத்துக்கான 'ஏ' பிரிவிற்கு உயர்ந்த கொமர்ஷல் கிரெடிட் தற்போது ஒட்டுமொத்த கூடைப்பந்து வெற்றியாளராக உள்ளது.
 
பண்டுக ரணசிங்க பயிற்சியளிக்கும் கொமர்ஷல் கிரெடிட் கூடைப்பந்தாட்ட அணியானது ஃபைசால் தேவானந்த (அணித்தலைவர்), மனரம் பண்டார, ஹர்ஷதேவ டி சில்வா, கயான் டி குரூஸ், கயான் மீதெனிய, பரனீத் உடுமலகல, சுதேஷ் அஹமட், சஞ்ஜீவ குலுமின, லக்ஷான் பெரேரா, இந்திக ரொஷான் மற்றும் ரஞ்ஜித் ஹெட்டியராச்சி ஆகியோரைக் கொண்டுள்ளது. மனோஜ் பெர்னாண்டோ மற்றும் எஸ்.பீ.நிரோஷன் அணி முகாமையாளர்கள் ஆவர்.
 
'கடந்த வருடம் நாம் 'பி' பிரிவு வெற்றியாளர்களாக இருந்ததுடன் இந்த சாதனை குறித்து பெருமையடைகிறோம். எமது இலக்கு 'ஏ' பிரிவு வெற்றியாக இருந்ததுடன், இவ்வருடம் நாம் அதனை அடைந்துள்ளோம்' என வெற்றிபெற்ற அணியின் வீரர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X