2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி

Kogilavani   / 2013 ஜூலை 07 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா நானுஓயா பிரதேச பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றப்போட்டி நேற்று சனிக்கிழமை காலை ரதல்ல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் இறுதிப் போட்டியில் நாவலர் தமிழ் மகா வித்தியாலயமும்  கார்லபேக் தமிழ் வித்தியாலயமும் மோதிகொண்டன.

இப்போட்டியில் கார்லபேக் தமிழ் வித்தியாலயம் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.

போட்டியில் எபஸ்போட் தமிழ் வித்தியாலயம், கார்லபேக் தமிழ் வித்தியாலயம், டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயம், நாவலர் தமிழ் மகா வித்தியாலயம், பாமஸ்டன் தமிழ் வித்தியாலயம் ரதல்ல தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் பங்குபற்றின.

போட்டிகள் லீக் அடிப்படையிலும் நொக் அவுட் முறையிலும் நடைபெற்றன.

போட்டியின் சிறந்த வீரனாக பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தின் கிதுசான் தெரிவு செய்யப்பட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X