2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மத்திய மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி

A.P.Mathan   / 2013 ஜூலை 07 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்
 
மத்திய மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் வத்துகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த வலள ஏ.இரத்நாயக்கா மத்திய கல்லூரி பெண்கள் பிரிவில் 22ஆவது வருடமாகவும் ஆண்கள் பிரிவில் 15 வதுவருடமாகவும் சம்பியனானது.
 
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் நிறைவடைந்த மேற்படி போட்டியில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ பிரதம அதிதியாகக் கலந்து பரிசில்களை வழங்கினார்.
 
வலள ஏ.இரத்நாயக்கா மத்திய கல்லூரி ஆண்கள் பிரிவில் 17 மற்றும் 21 வயதின் கீழ் சம்பியன்களாக தெரிவானதுடன் புதிய சாதனையாளர்களாக 21 வயதின் கீழ் ஈட்டி எறிதல், 15 வயதின் கீழ் 400 மீற்றர் ஓட்டப்போட்டி, 19 வயதின் கீழ் 400 மீற்றர் ஓட்டப் போட்டி, 21 வயதின் கீழ் 400 மீற்றர் ஓட்டப் போட்டி என்பவற்றில் சாதனை நிகழ்த்தப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X