2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்தாட்ட போட்டியில் ஏறாவூர் அணி வெற்றி

Kogilavani   / 2013 ஜூலை 08 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், டி.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன்


கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி சவால் வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. எனப்படும் இளந்தாரகை விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றுள்ளது.

இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில்; வாகரை கிறீன் ஸ்;டார் விளையாட்டு கழகத்தை வெற்றிகொண்டு 2013ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி சவால் வெற்றிக்கிண்ணத்தை இவ் அணி பெற்றுக்கொண்டது.

இராணுவத்தின் 23வது படைப்பிரிவு மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றப்போட்டியினை நடத்தி வந்தது.

இப்போட்டியின் இறுதிப்போட்டி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. எனப்படும் இளந்தாரகை விளையாட்டுக் கழகமும்; வாகரை கிறீன் ஸ்;டார் விளையாட்டு கழகமும் மோதிகொண்டன.  

இப்போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. எனப்படும் இளந்தாரகை விளையாட்டுக்கழகம் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, 23வது படைப் பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் அத்துல கொடுப்பிலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இப் போட்டியில் முதலாமிடத்தை பெற்ற ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. கழகத்திற்கு ஒரு லட்சம் ரூபாவும் இரண்டாமிடத்தை பெற்ற வாகரை கிறீன் ஸ்டார் விiளாயட்டுக்கழகத்திற்கு 75000 ரூபாவும், மூன்றாமிடத்தை பெற்ற கோல்ட் பீஸ்
விளையாட்டுக்கழகத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்பட்டதுடன் முதலாம் மற்றும் இரண்டாமிடங்களை பெற்ற கழக வீரர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X