2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஆரையம்பதி பாலமுனை நெசனல் கழகம் வெற்றி

Kogilavani   / 2013 ஜூலை 09 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிளக்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்திய கால்பந்தாட்ட சுற்றப்போட்டியில் ஆரையம்பதி பாலமுனை நெசனல் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.

காத்தான்குடி பிளக்பேர்ள்ஸ் விளையாட்டு;க்கழகத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி அக்கழகம் நடாத்திய அணிக்கு எட்டுபேர் கொண்ட காலபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று திங்கட்கிழமை மாலை காத்தான்குடி சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் ஏறாவூர் லக்கி ஸ்ட்டாரஸ்; விளையாட்டுக்கழகமும் ஆரையம்பதி பாலமுனை நெசனல் விiளாட்டுக்கழகமும் பங்குபற்றின.

இதில் பாலமுனை நெசனல் விளையாட்டுக்கழகம் மூன்றுக்கு ஒன்று என்ற கோள்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் காத்தான்குடி பிளக்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகருமான என்.கே.றம்ழான் தலைமையில் நடைபெற்ற இதன் பரிசளிப்பு வைபவத்தில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான அப்துல் லத்தீப் அலிசப்ரி மற்றும் எச்.எம்.எம்.பாக்கீர், மஞ்சந்தொடுவாய் அபிவிருத்திக்குழுவின் தலைளையா எம்.பாதுசா சவுண்டஸ் விiயாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.ஐ.லத்தீப், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வை.ஆதம்லெவ்வை உட்பட முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X