2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ். ஹொக்கிச் சங்க ஏற்பாட்டில் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 09 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மாவட்ட ஹொக்கி மத்தியஸ்தர்களின் தரத்தை உயர்த்தும் வகையிலும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை மேம்பாடையச் செய்யும் வகையிலும் எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை பகல் 9 மணிக்கு பயிற்சிப்பட்றையும் கருத்தரங்கும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

யாழ். மாவட்ட ஹொக்கிச் சங்கத்தின் ஏற்பாட்டிலான இப்பயிற்சிப்பட்டறையையும்; கருத்தரங்கையும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறை விரிவுரையாளர் ஜீ.டானியல் மதியழகன் நடத்தவுள்ளார்.

இக்கருத்தரங்கிலும் பயிற்சிப்பட்டறையிலும் யாழ். மாவட்ட அனைத்து ஹொக்கி மத்தியஸ்தர்களையும் ஹொக்கி விளையாட்டு வீர, வீராங்கனைகளையும் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்ட ஹொக்கிச் சங்கம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X