2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண சம்பினாகிய யாழ்ப்பாண கல்வி வலயம்

Kogilavani   / 2013 ஜூலை 09 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் வருடா வருடம் நடைபெற்று வரும் தடகள, மைதான மற்றும் பெரு விளையாட்டு நிகழ்வுகள், 5 வருடங்களைக் கடந்து இம்முறை 6ஆவது வருடமாக நடைபெற்றது.

முன்னதாக அணிகளுக்கிடையில் நடக்கும் பெரு விளையாட்டுப்போட்டிகள் முடிவடைந்து, கடந்த 4 ஆம் திகதி வியாழக்கிழமை தடகள், மைதான நிகழ்வுகள் வடமாகாண கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

நடைபெற்று முடிந்த 5 வருடங்களில் பாடசாலை, கோட்டம், வலயம், மாவட்டம் என்று ரீதியில் போட்டிகள் நடைபெற்று மாகாணப் போட்டிகள் நடைபெறும். இம்முறை அவ்வாறு இல்லாமல் வலய மட்டம் வரையிலும் போட்டிகள் நடைபெற்று நேரடியாக மாகாண மட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன.

முன்னதாக நடைபெற்ற மூன்று ஆண்டுப் போட்டிகளில், 2010, 2011 ஆண்டுப் போட்டிகளில் வலிகாமம் கல்வி வலயம் அனைத்துப் போட்டிகளிலும் சம்பியனாகியிருந்ததுடன் இறுதி வருடமான 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்வி வலயம் சம்பியனாகியிருந்தது.

அதன் வெளிப்பாடு இவ்வருடம் நடைபெற்ற போட்டியில் தடகள மைதானம், மற்றும் பெரு விளையாட்டுக்களில் இரு வலயங்களின் போட்டித் தன்மை வெகுவாக வெளிப்பட்டது. பெரு விளையாட்டுக்களில் யாழ்ப்பாண வலயம் முன்னிலை பெற்றும், தடகள மற்றும் மைதான நிகழ்வுகளில் வலிகாமம் கல்வி வலயம் முன்னிலை பெற்றும் இருந்தன.

இருந்தும் அனைத்துப் போட்டிகளின் அடிப்படையில் 1056 புள்ளிகள் பெற்ற யாழ்ப்பாணக் கல்வி வலயம் அனைத்துப் போட்டிகளின் சம்பியானாகிய, கடந்த வருட சாதனையினை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

921 புள்ளிகளைப் பெற்ற வலிகாமம் கல்வி வலயம் இரண்டாமிடத்தினையும், 416 புள்ளிகள் பெற்ற வடமராட்;சி கல்வி வலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.

அனைத்து போட்டிகளின் அடிப்படையில் ஒவ்வொரு வலங்களும் பெற்றுக்கொண்ட புள்ளிகள் வருமாறு,

இம்முறை நடைபெற் வடமாகாணப் போட்டிகளில் பெரு விளையாட்டுக்களில் யாழ்ப்பாண வலயம் 566 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகியதுடன் இரண்டாமிடத்தினை 412 புள்ளிகள் பெற்ற வலிகாமம் கல்வி வலயம் பெற்றுக்கொண்டது. மூன்றாமிடம் 315 புள்ளிகள் பெற்ற வடமராட்சி கல்வி வலயத்திற்கு கிடைத்து.

பெரு விளையாட்டுப் போட்டிகளில் யாழ்ப்பாண வலயத்தின் ஆதிக்கத்தினைத் தகர்த்த வலிகாமம் கல்வி வலயம் தடகள மற்றும் மைதான நிகழ்வுகளுக்கான போட்டியில் 509 புள்ளிகளைப் பெற்று சம்பியானாகியது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, வலிகாமம் கல்வி வலயத்தின் வீராங்கனைகள் போட்டிகளில் செலுத்திய ஆதிக்கமேயாகும்.

தடகள், மைதான நிகழ்வுகளில் யாழ்ப்பாண கல்வி வலயம் 490 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினைப் பெற்றதுடன். 316 புள்ளிகள் பெற்ற மன்னார் மாவட்ட அணி மூன்றாமிடத்தினைப் பெற்றுக்கொண்டது.

தடகள, மைதான நிகழ்வுகளில் வடமாகாண வீரர்கள் தமது அதீத திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதற்குச் சான்றாக யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தடகள் மைதான போட்டிகளில், கடந்த வருடங்களில் நிகழ்த்தப்பட்டிருந்த 89 சாதனைகள் வீர, வீராங்கனைகளினால் முறியடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தளவுக்கு சாதனைகள் முறியடிக்கப்பட்டதும் ஒரு சாதனையாகும்.

பெரு விளையாட்டுக்களில் பின்னிலையிலிருந்த மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் தடகள், மைதான நிகழ்வுகளில் முன்னேற்றம் காட்டியுள்ளமையானது அந்த வலங்களிலுள்ள வீர, வீராங்கனைகள் அஞ்சல் ஓட்டம் மற்றும், தடகள ஓட்டங்களில் ஆதிக்கம் செலுத்தியிருந்தமையே ஆகும்.


போட்டிகளில் வெற்றியீட்டி வீர, வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கான பரிசில்களை இறுதி நாள் போட்டிகளுக்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ்.மாவட்ட பாராளுமக்க உறுப்பினர் சில்வெஸ்டர் அலன்ரீன் வழங்கினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X