2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி

Kogilavani   / 2013 ஜூலை 10 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

பிரிவு – 3 அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் 50 பந்து பரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை பாடசாலை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டிகள் தற்போது நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றன.

மேற்படி சுற்றுப்போட்டிகளில் ஆறு பாடசாலை அணிகளுடனான போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி பங்குபற்றியிருந்தது.

மகாஜனக் கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 பந்துபரிமாற்றங்கள் 6 இலக்குகளை இழந்து நிறைவில் 303 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜெனிபிளமிங் 127 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பதிலளித்தாடிய மகாஜனக் கல்லூரி அணி அனைத்து இலக்குகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஹாட்லிக் கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.N;ஜான்ஸ் கல்லூரி அணி 50 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜெனிபிளமிங் 128 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பதிலளித்தாடிய ஹாட்லிக் கல்லூரி அணி 64 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்து தோல்வியடைந்தது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 50 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜெனி பிளமிங் 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பதிலளித்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி 63 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

ஸ்கந்தவரோதயாக் கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 48.2 பந்துபரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஜெனிபிளமிங் 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பதிலளித்தாடிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி 89 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

யூனியன் கல்லூரியுடன் நடைபெற்ற போட்;டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன் கல்லூரி அணி அனைத்து இலக்குகளையும் இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலளித்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி விக்கெட் இழப்பின்றி இலக்கினை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எமில்டன் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியுடன் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி 86 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. பதிலளித்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 5 இலக்குகளை

இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஜெனிபிளமிங் 14 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இப்போட்டிகளில் மொத்தமாக 561 ஓட்டங்களை குவித்து செபமாலை ஜெனிபிளமிங் சாதனை படைத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X