2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Kogilavani   / 2013 ஜூலை 13 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையினால் யாழ்.மாவட்;டத்தில் அழைக்கப்பட்ட 8 பாடசாலைகளின் 15, 17 வயதுப்பிரிவு கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில்  'கார்ட்லி பமில' என்று அழைக்கப்படும் கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி தமது கூடைப்பந்தாட்ட திடலில் நடத்தியது.

இம்மாதம் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் இறுதிப்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

15 வயதுப் பிரிவினருக்கான இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினை எதிர்த்து மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை புளு அணி மோதியது. இதில் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை புளு அணி சம்பியனாகியது.

17 வயதுப் பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி மோதியது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி சம்பியனாகியது.

15 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் தொடர் நாயகனாக ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை புளு அணியினைச் சேர்ந்த வை.சிம்றோனும், 17 வயதுப்பிரிவன் தொடர் நாயகனாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் எஸ்.உதயாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X