2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஞானமுருகன் அணி சம்பியனாகியது

Kogilavani   / 2013 ஜூலை 15 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்
நெடியகாடு விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ்.மாவட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற அணிக்கு 9 பேர் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஞானமுருகன் அணி சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு மின்னொளியில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஊரெழு றோயல் அணியினை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணி மோதியது.

போட்டியின் முதற்பாதியில் ஊரெழு றோயல் அணியின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்பட்ட, அவ்வணி கோலடிக்கும் முனைப்பில் ஈடுபட்டது. எனினும் முடிவுக்கும் திறன் இல்லாமையினால் கோல்கள் பெற்றுகொள்ள முடியவில்லை.

முதற்பாதியின் இறுதி நேரத்தில் ஊரெழு றோயல் அணிக்கு தண்டனை உதை வாயப்பு ஒன்று கிடைத்தது. அதனைக் கோலாக்கி முதற்பாதியாட்டத்தில் 1:0 என்று ஊரெழு றோயல் அணி முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியாட்டத்தில், ஆக்கிரோஷமாக விளையாடிய ஞானமுருகன் அணி விரைவிலேயே பதில் கோலடித்தது. போட்டி நேரம் முடிவடையும் போது இரு அணிகளும் தலா ஒரு கோல் பெற்றிருந்தது.

இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் ஞானமுருகன் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X