2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அரியாலை ஐக்கிய அணி சம்பயினாகியது

Kogilavani   / 2013 ஜூலை 15 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


ஆறுகால்மடம் லோட்டஸ் விளையாட்டுக்கழகம் சொப்ற் லொஜிக் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்.மாவட்ட மென்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5 பந்து பரிமாற்றங்கள் கொண்ட மென்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் தமது விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்தியது.

82 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் லெவின்ஸ்டார்ஸ் அணியினை 4 இலக்குகள் வித்தியாசத்தில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகமும், ஏபி அணியினை 16 ஓட்டங்களால் மல்லாகம் ஸ்ரீ முருகன் அணியும் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 

இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மரியாலை ஜக்கிய அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்தது.

அதற்கிணங்கக் களமிறங்கிய மல்லாகம் ஸ்ரீ முருகன் அணி 6.3 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 33 ஓட்டங்களைப் பெற்றது.

34 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழக அணி 4 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்து சம்பியனாகியது.

இச்சுற்றுப்போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக மல்லாகம் ஸ்ரீமுருகன் அணியின் எஸ்.புனிதராஜும், சிற்நத பந்துவீச்சாளராக ஏபி அணியின் ரஜஸராஜும் தெரிவு செய்யப்பட்டதுடன், இறுதிப்போட்டியில் நாயகனாக அரியாலை  ஐக்கிய அணியின் ஏ.எஸ்.றொசானும் தெரிவு செய்யப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X