2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கபடி, கிரிக்கெட் போட்டிகளில் முறையே மட்டு, அம்பாறை அணிகள் சம்பியன்

Super User   / 2013 ஜூலை 30 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார், ரீ.கே.றஹ்மத்துல்லா


25ஆவது யூத் ஸ்ரீலங்கா தேசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றுமு; தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு கடந்த 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை பொலனறுவையில் இடம்பெற்றது.

இதில் ஆண்களுக்கான கபடிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

12:23 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிபெற்ற மட்டக்களப்பு அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தங்கப் பதக்கத்தினை தட்டிக்கொண்டனர். இந்த போட்டியில் சிறந்த விளையாட்டு வீரராக எஸ்.சுகந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அம்பாறை மாவட்டம்; மிக சிறப்பாக விளையாடி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மிக சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டிய அட்டாளைச்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த ஜமால்தீன் பஸ்மீர் 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X