2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்தாட்டத்தில் ஊரெழு றோயல் அணிக்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 30 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


அரியாலை சனசமூக நிலையத்தால் நடத்தப்பட்ட கால்பந்தாட்டப் போட்டியில் ஊரெழு றோயல் அணி வெற்றி பெற்றுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை அரியாலை சனசமூக நிலையம் தனது  மைதானத்தில் நடத்தி வந்தது.

8 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இப்போட்டி ஊரெழு றோயல் அணிக்கும்; அரியாலை ஜக்கிய அணிக்கும் இடையில் நடைபெற்றது.

போட்டியின் 2ஆவது நிமிடத்தில் அசத்தலான கோல் ஒன்றுடன் அரியாலை ஜக்கிய அணி ஆரம்பித்தது. இதற்கு பதில் கோலினை அடுத்த சில நிமிடங்களில் றோயல் அணி பெற்றது. முதல் பாதியாட்டத்தின் இறுதி நிமிடங்களில் அரியாலை ஜக்கிய அணி மேலும் ஒரு கோல் பெற்று 2 : 1 என்று முதல் பாதியாட்டத்தில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியாட்டத்தில் றோயல் அணியின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்பட, அவ்வணி அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்று முன்னிலை பெற்றது.

இறுதியில் ஊரெழு றோயல் அணி 3 : 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X