2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஓசானம் இல்லத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களை பாதுகாத்து பராமரித்து பயிற்சியளிக்கும் நிலையமாக விளங்ககும் ஓசானம் இல்லத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது.

இதில், பிரதம விருந்தினராக மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகஸ்தர்  அருள்மொழி அவர்களும், சிறப்பு விருந்தினராக மியாமி தொழிற்பயிற்சி பொறுப்பாளர் அருட்தந்தை இதெயராஜ் அவர்களும் கலந்துகொண்டனர்.

கிழக்கிலங்கை மட்டு நகரின் சத்துருக்கொண்டானில்,  மனவளர்ச்சி குன்றிய சிறார்களின் புகலிடமாகத் திகழ்வதுதான் ஓசானம் நிலையம்.

இந்நிலையம் 03.06.1986 ஆம் ஆண்டு  திருமலை மட்டு நகர் ஆயர் மேதகு கிங்ஸ்லி சுவாமிபிள்ளையால் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களை பாதுகாத்து பராமரித்து பயிற்சியளிக்கும் நிலையமாகும். இவ்வில்லத்தில் திருக்குடும்ப சபை அருட்சகோதரிகளின் பணியின் மூலம் பிள்ளைகளின் வளர்ச்சியில் பல முன்னேற்றங்கள் அடைந்துள்ளன.

9 பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் இல்லம் வளர்ச்சியடைந்து  30  பிள்ளைகளை  கொண்டு செயற்பட்டு வருகின்றது.
இங்கு விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு பாடசாலை, தொழில்பயிற்சி நிலையம் என இரு பிரிவுகள் மூலம் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளும், வழிகாட்டல்களும் கொடுக்கப்படுகின்றன. 

தற்போது 30 பேர் உள்ளனர். இதில் 21 பெண்கள் 9 ஆண்கள். இங்கு 6 வயது தொடக்கம் 40 வயது வரையிலான வயது நிலையினர் இருக்கின்றார்கள்.

இங்கு அருட்சகோதரியும் 3 ஆசிரியர்களும் பணி ஆற்றுகின்றனர். இவ் இல்லம் திரு குடும்ப அருட்சகோதரிகளால் வழிநடத்தப்படடு வருகின்றது. 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X