2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சுசந்திகா ஜயசிங்க யாழ். விஜயம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்,-எஸ்.கே.பிரசாத்


வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்ற சுசந்திக ஜயசிங்க இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் 15 வயக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பயிற்சிகளை யாழ்;ப்பாணம் துஐரயப்பா விளையாட்டரங்கில் வைத்து சுசந்திகா வழங்கினார்.

100, 200 மீற்றர் ஓட்டம், நீளம் பாய்தல், உயரம் பாய்தல் மற்றும் தடைதாண்டல் போட்டிகளுக்கான பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன. பயிற்சிகளின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துக்கூறிய சுசந்திகா,

வீரர்களுக்கு 15 வயதுப்பிரிவில் இருந்து பயிற்சிகளை வழங்கி, அவர்களின் தனித்திறன்களை விருத்தி செய்து, அவர்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லுகின்ற நோக்குடன் தாம் இந்த பயிற்சிமுகாமினை நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X