2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண விளையாட்டு விழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

கிழக்கு மாகாண விளையாட்டுவிழா மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஜ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகும் இவ் விளையாட்டுவிழா 18ஆம் திகதியும் நடைபெறும்.

மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என்.மதிவாணன் தலைமையில் தலைமையில் நடைபெறவுள்ள இவ் விளையாட்டு விழாவில்  பிரதம அதிதியாக மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், மாவட்ட உதவி செயலாளர் வி.வாசுதேவன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இறுதி நாள் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபேகுணவர்த்தன மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X