2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கொக்குவில் மத்தி மற்றும் சென்ரல் அணிகள் இறுதிப் போட்டியில்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

மானிப்பாய் பரிஷ் விளையாட்டுக்கழகம் பாலகிருஸ்ஸணன் வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் 20 பந்துப் பரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியினை மானிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில் நடத்தி வருகின்றது.

முதற்சுற்றுப்போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றதுடன், லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் பங்குபற்றியிருந்தன. லீக் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் முன்னலை வகித்த 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டு, அவைகளுக்கிடையில் காலிறுதி போட்டிகள் தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள் விலகல் முறைப்படி நடைபெற்றது.

காலிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகம், பற்றீசியின் அணி, ஜொனியன்ஸ், சென்ரல் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியினை எதிர்த்து பற்றீசியன் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, 20 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஜனுதாஸ் 96 ஓட்டங்களையும், ஜெயரூபன் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பற்றீசியன் சார்பாக லிவிங்டன் 3 இலக்குகளை கைப்பற்றினார். பற்றீசியன் அணி 184 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு  பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. பற்றீசியன் அணி 20 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு 7 இலக்குகளை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் சென்ரல் அணியினை எதிர்த்து ஜொனியன்ஸ் அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு 6 இலக்குகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அகிலன் 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

சென்ரல் அணி 152 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி, 18 பந்துபரிமாற்றங்களில் 4 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் றஜீவ்குமார் 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X