2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யங் ஒலிம்பிக்கஸ் கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு விளையாடும் தகைமையயை யங் ஒலிம்பிக்கஸ் கழகம் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில்  நேற்று சனிக்கிழமை  முதலாவது அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சோடியாக் கழகத்ததை எதிர்த்து யங் ஒலிம்பிக்ஸ் கழகம் மோதியது.

50 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட இச்சுற்றுப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சோடியாக் கழகத்தினர்  முதலில் களத் தடுப்பை மேற்கொண்டனர்.

யங் ஒலிம்பிக்ஸ் கழகம்  37.5 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 184 ஓட்டங்களைப் பெற்றனர்.

185 என்ற இலகுவான இலக்கினை பெற்றுக் கொள்ள களம் இறங்கிய சோடியாக் கழகம்  36.2 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இந்த நிலையில், யங் ஒலிம்பிக்ஸ் கழகம்  29 ஓட்டங்களால் வெற்றி பெற்றுக் கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X