2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சென்.பீற்றர்ஸ் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

நவாலி சென்.பீற்றர்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் மறைந்த கழக உறுப்பினர் குமார் தேவராசா ஞாபகார்த்த யாழ்.மாவட்ட கால்ப்பந்தாட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் அணிக்கு 9 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

மேற்படி சுற்றுப்போட்;டியில் இதுவரையிலும் நடைபெற்ற போட்டியில் சென்.மைக்கல், சென்.நீக்கிலஸ், அரியாலை ஜக்கியம், திருக்குமரன், சென்.அன்ரனீஸ் அணிகள் வெற்றிபெற்றிருந்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டிகளில் முதல் போட்டியில் நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணியினை எதிர்த்து உரும்பிராய் சென்.மைக்கல் அணி மோதியது.

இப்போட்டியில் சென்.மைக்கல் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் மோதிய அரியாலை ஜக்கிய அணிக்கும் உரும்பிராய் திருக்குமரன் அணிக்கும் இடையிலான போட்டியில், 4:2 என்ற கோல் கணக்கில் அரியாலை ஜக்கிய அணி வெற்றிபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X