2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சினேக பூர்வ கால்பந்தாட்ட போட்டி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் 300ஆவது சினேக பூர்வ கால்பந்தாட்ட போட்டி மாவனல்லை யுனைட்டட் விளையாட்டுக் கழகத்திற்கும், கல்முனை பிரலியன்ட் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் நேற்று மாலை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு 22 வருடங்கள் ஆகும் நிலையில் 300 ஆவது தடவையாக நடைபெறும் இக்காலபந்தாட்ட போட்டியில் 4:0 என்ற கோல் கணக்கில் பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இப்போட்டியின்போது பார்வையாளர்களுக்கு இலவச கூப்பன் வழங்கப்பட்டு குழுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட சிறுவர் அதிஷ்டசாலிக்கு  துவிச்சக்கர வண்டி ஒன்று பரிசளிக்கப்பட்டது.

இதேவேளை,  இப்பிரதேசத்தின் கால்பந்தாட்ட விளையாட்டுதுறை வளர்ச்சிக்காக சேவையாற்றிய விளையாட்டு ஆசிரியர் எம்.ஐ.ஏ.நசார் பிரதம அதிதியினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அத்தோடு இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு நினைவுச்சின்னம்
வழங்கிவைக்கப்பட்டது.

பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா,  கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் ரஸ்ஸாக், உட்பட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X