2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அகில இலங்கை பாடசாலை மட்ட விளையாட்டுப்போட்டிகள்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன், சசிக்குமார்


பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் இவ் வருடம் முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

நேற்று ஆரம்பமான இப்போட்டிகள், மட்டக்களப்பு, ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்திலும்  ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் மைதானத்திலும் மட்ஃசிவானந்தா விளையாட்டு மைதானத்திலும் மட்ஃஇந்துக்கல்லுரி விளையாட்டு மைதானத்தில் நாளை வரை இடம்பெறவுள்ளது.

இப்போட்டிகளில், 9 மாகாணங்களில் இருந்தும் 27 மகளீர், ஆடவர் கிரிக்கட் அணிகளும், 83 பாடசாலைகளில் இருந்து 108 கரம் அணிகளும் கலந்துகொள்கின்றன.

ஆரையம்பதி மகாவித்தியாலய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற ஆடவருக்கான கிரிக்கட் போட்டிகளை கிழக்கு மாகாண சபையின் முன்னாள்  உறுப்பினர் பூ.பிரசாந்தன் கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X