2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அகில இலங்கை பாடசாலை கரம் சுற்றுப்போட்டியில் பன்னிப்பிட்டி அணி சாம்பியன்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்
 
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கரம் சுற்றுப்போட்டியில் 15 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் நுகேகொட புனித ஜோன் கல்லூரி முதலாமிடத்தையும் 15 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் நுகேகொட மகாமாயா பெண்கள் கல்லூரியும் 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தை மொரட்டுவ பிரின்ஸ் ஓப் வேல்ஸ் கல்லூரியும் 19 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயம் முதலாமிடத்தையும் சுவீகரித்துக்கொண்டதாக கொழும்பு கல்வி வலய விளையாட்டு பிரதி கல்வி பணிப்பாளர் எம்.லலித் பந்துல தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற இப்போட்டிகளில் நாடளாவிய ரீதியில் 91 பாடசாலைகள் பங்குகொண்டிருந்தன.
 
15 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இரண்டாமிடத்தை கொழும்பு றோயல் கல்லூரியும் மூன்றாமிடத்தை கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியும் பெற்றுக்கொண்டதுடன் பெண்கள் பிரிவில் இரண்டாமிடத்தை நுகேகொட சமுத்திராதேவி பெண்கள் உயர்தர பாடசாலையும் மூன்றாமிடத்தை வவுனியா அல் இக்பால் மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.
 
19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இரண்டாமிடத்தை கொழும்பு றோயல் கல்லூரியும் மூன்றாமிடத்தை புனித ஜோன்ஸ் கல்லூரியும் பெண்கள் பிரிவில் இரண்டாமிடத்தை பதுளை விசாகா பெண்கள் உயர்தர பாடசாலையும் மூன்றாமித்தை நுகேகொட மகாமாய பெண்கள் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.
 
பரிசளிப்பு விழா மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் இடம்பெற்றது.





 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X