2025 ஜூலை 19, சனிக்கிழமை

"இந்துக்களின் போர்" - நாளை

A.P.Mathan   / 2012 மார்ச் 01 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க்ரிஷ்)

"இந்துக்களின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பிக்கவுள்ளது.

கொக்குவில் இந்துக் கல்லூரி நாகலிங்கம் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இரண்டு நாட்கள் கொண்ட போட்டியாக இடம்பெறவுள்ளது.

இப்போட்டிக்கான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் தலைவராக கி.கிருசோபனும், உபதலைவராக வ.ஜஸ்மினனும் பணியாற்றவுள்ளனர்.

ஐந்தாவது தடவையாக இடம்பெறவுள்ள இந்துக்களின் போரில் கடந்த தடவை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற நான்காவது போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X