2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

1,000 மெற்றிக் தொன் அரிசி அரசுடைமையானது

Freelancer   / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி களஞ்சியசாலைகளை சோதனை செய்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்ல தலைமையிலான குழுவினர், அந்த கிடங்குகளில் இருந்து கிட்டத்தட்ட 1,000 மெற்றிக் தொன் அரிசியை கைப்பற்றியுள்ளனர்.

அரசால் விதிக்கப்பட்ட விலையில் அரிசி சந்தைக்கு வழங்கப்படாததால், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

சதொச மற்றும் உணவுத் திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 70 லொறிகள் பொலன்னறுவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கைப்பற்றப்பட்ட அரிசி கையிருப்பு, இன்று மதியம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாகவும் சதொச மூலம் விற்பனை செய்யவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .