2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அமைச்சரின் அழைப்புக்கு மல்கம் ஆண்டகை பதில்

Freelancer   / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறும் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அது தொடர்பில் அமைச்சருக்கு எழுதிய கடிதத்திலேயே பேராயர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலுக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனின், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வெளிப்படையான முறையில் இடம்பெறுகின்றன என்று தனக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றும் பேராயர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நம்பகமான விசாரணைகளின் முக்கியத்துவம் மற்றும் அந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று கர்தினால் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .