2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பார்ப்பாரற்ற நிலையில் சுவரோவியங்கள்

R.Maheshwary   / 2021 ஜூலை 18 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம் 

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, பெரிதும் முக்கியத்துவமளித்து இளைஞர் யுவதிகளுக்கு கைகொடுக்கும் வகையில், நகரங்கள் மற்றும் மூளை முடுக்கெங்கும் உள்ள சுவர்களில் வரையப்பட்ட சுவர் ஓவியங்கள், இன்று பார்ப்பாரற்று பாழாகி போயுள்ளன.

சுற்றுப்புற சூழலினை அழகுப்படுத்தும் நோக்கிலும் இளைஞர் யுவதிகளின் திறமைகளுக்கு கைகொடுக்கு வகையிலும் கடந்த காலங்களில் இந்த சுவரோவியங்கள் வரையப்பட்டன.

மூலப்பொருட்களுக்காகவும் வரைவதற்காகவும் பாரிய நிதி செலவிடப்பட்டதுடன், ஒரு சில இடங்களில் இந்த சித்திரங்களை வரைவதற்காக மதில் அருகில் காணப்பட்ட மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன.
இவ்வாறு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வரையப்பட்ட இந்த சித்திரங்கள் எவ்வித பராமறிப்புமின்றி அழிந்து போகும் நிலையில் உள்ளது.

 எனவே குறித்த ஓவியங்கள் காணப்படும் பிரதேசங்களில் உள்ள அரச நிறுவனங்கள் இந்த சித்திரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .