2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

500 குடும்பங்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு

Princiya Dixci   / 2021 ஜூன் 18 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, பொத்துவிலுள்ள மூன்று பிரதேசங்களில் ஆழமான குழாய் கிணறுகள் அமைக்கப்படவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரபின் இணைப்புச் செயலாளர்  வை.எல். நியாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரபின்  வேண்டுகோளுககிணங்க இலங்கை அல் நூர் சமூக சேவை அமைப்பின் உதவியுடன் இக்கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

அதன் முதற்கட்டமாக, செங்காமம் கிராமத்தின் நீண்டகால பிரச்சினையாகவிருந்த குடிநீர் பிரச்சினை தீர்க்கும் பொருட்டு,  குழாய்க் கிணறு அமைக்கும் வேலைகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம், குறித்த பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்கள் நன்மையடைவதோடு, மக்களின் சுகாதார, பாதுகாப்பு விடயங்களின் மேம்பாட்டு நிலைகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பொத்துவில் ஹிதாயாபுரம், ஜெயிக்கா வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களுக்கும் இக்குழாய் நீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X