2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கொவிட் தடுப்பூசிகளை விரைந்து வழங்கவும்’

Princiya Dixci   / 2021 ஜூலை 18 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலளார் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட்-19 தடுப்பூசி, இலங்கையின் சகல சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு மாத்திரம் வழங்கப்படாமையானது அநீதியாகும்.

“இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் தொடர்பாக கவனயீனமாக இருப்பதாகத் தெரிகின்றது. கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட்-19 தொற்றின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருவதோடு, மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

 “கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டு வரும் நிலையில், கல்முனைக்கு ஏன் இந்தத் தாமதம்?

“உங்களின் கருணையான அவதானத்தைச் செலுத்தி, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு கொவிட் - 19 தடுப்பூசிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவும்” என அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .