2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சொகுசு வாகன இறக்குமதி - 500 மில்லியன்

Freelancer   / 2021 ஜூன் 13 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான, வாகன இறக்குமதிக்காக 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தேசிய விடுதலை மக்கள் முண்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.

முள்ளிப்பொத்தானையில் உள்ள கட்சியின் தலைமை காரியலாயத்தில் நேற்று (12) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டு மக்களின் தற்போதைய நிலையை அறியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதிக்காக 500 மில்லியன் என்பது இப்போதைக்கு தேவையா? இது மக்களின் பணமே, மக்களின் நிலை அறிந்து கொவிட்19  தடுப்பூசி மருந்து இல்லாமல் தடுமாறும் இந்த நிலையில், அரசாங்கம் செயற்படுவது தவறு என, தேசிய விடுதலை மக்கள் முண்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் கேள்வி எழுப்பினார். 

மேலும் இந்த வாகனக் கொள்வனவு செய்ய முன்வந்திருப்பது, ஒரு மடமைத்தனமான விடயமாகும். மக்களின் தேவைகளுக்குப் பணத்தைப் பயன்படுத்தாமல், சொகுசு வாகனங்கள் கொள்வனவுக்குப் பயன்படுத்துவது தவறான செயலாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் ஒருவர் கூட வேண்டாம் என்று வாய் திறந்து சொல்லவில்லை. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உறுதுணையாக உள்ளார்கள். எல்.சி (LC) திறந்துள்ளார்கள் இதைத் தடை செய்ய வேண்டும்.

இதைத் தட்டிக் கேட்பதற்கு பலமான  எதிர்க்கட்சி இந்த நாட்டில் இல்லை. இரவோடு இரவாக பெற்றோலுக்கு விலையும் ஏற்றியுள்ளார்கள் என்றார்.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X