2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பூட்டை உடைத்து, புதிய அதிபருக்கு பாடசாலை ஒப்படைப்பு

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது, கமு / கமு/ அல்- ஹிலால் வித்தியாலயத்தின் புதிய  அதிபராக நியமிக்கப்பட்ட யு.எல். நஸாரை, பாடசாலை நுழைவாயில்  பூட்டை உடைத்து, பாடசாலை நிர்வாகத்தை ஒப்படைத்த சம்பவம், இன்று (04)  நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் தலைமையில், இவ்வாறு பூட்டை உடைத்து புதிய அதிபர் தனது  கடமைகளைப் பெறுப்பேற்றார்.  

இப்பாடாசாலையில் முன்னர் அதிபராகக் கடமையாற்றிய எம்.எஸ்.எம். வைஸால் வருடாந்த இடமாற்றம் மூலம் வேறு பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து உருவான வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட அதிபர் யு.எல். நஸார் அடங்கிய பிரமுகர்கள், கடமைகளை பெறுப்பேற்க இன்று பாடசாலைக்கு வருகை தந்திருந்தபோது, பாடசாலை நுழைவாயில் பூட்டப்பட்டிருந்தது.

அத்துடன், திறப்பும் யாரிடமும் கையளித்திருக்கப்படவில்லை என்பதை அறிந்த கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை பூட்டை உடைத்து, புதிய அதிபரிடம் பாடசாலை நிர்வாகத்தை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பிராந்திய முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .