2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பரீட்சை இரத்து; காரணமான அதிகாரிகளை தண்டிக்கவும்’

Princiya Dixci   / 2021 ஜூலை 28 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கடந்த பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட ஆங்கில ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை, கிழக்கு மாகாண ஆளுனரால் இரத்துச் செய்ய்யப்பட்டமைக்கு பாராட்டு தெரிவித்துள்ள இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம், இப்பரீட்சை இரத்து செய்யப்படுமளவுக்கு முறைகேடுகளை மேற்கொண்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனை வலியுறுத்தி, மேற்படி சங்கம் ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைத்திருப்பதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார், நேற்று (27) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; “பரீட்சையை இரத்துச் செய்து விட்டு, மீண்டுமொரு பரீட்சையை நடத்துவதுடன், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடா முடியாது, மேற்படி பரீட்சையில் இடம்பெற்ற ஊழல், ஒழுங்கீனங்களுக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் தகுதி, தராதரம் பாராது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

“மேற்படி பரீட்சையை நடத்துவதற்காக செலவிடப்பட்ட பணம் பொதுமக்களின் வரிப்பணமாகும். இப்பணம் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டும்.

“அத்தோடு, மீண்டுமொரு பரீட்சைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை பரீட்சார்த்திகளுக்கு உருவாகியுள்ளமைக்கான நிவாரணமும் வழங்கப்பட வேண்டுமெனவும் அக்கடிதத்தில் கோரியுள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .