2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

10 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு

J.A. George   / 2021 ஒக்டோபர் 22 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் 10 மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 21,154 டெங்கு ​நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மருத்துவர் ஷிலந்தி செனவிரத்ன கூறியுள்ளார்.

மழையுடனான வானிலையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,  இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார். 

இரண்டு நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் நீடித்தால் நிச்சயமாக வைத்தியரை நாடுமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மருத்துவர் ஷிலந்தி செனவிரத்ன அறிவுறுத்தினார்.

கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .