Freelancer / 2025 நவம்பர் 02 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் சுமார் 3 கோடி ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய 100 கிலோவுக்கு அதிக எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று (01) சுப்பர்மடம் கடற்கரையில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சா பொதிகள் வாகனம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டிருந்தன. இருந்த போதிலும் கடத்தலில் ஈடுபட்ட இருவர் படகுடன் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கடத்தலின் போது துணை புரிந்த மேலும் ஒரு படகு அடையாளம் காணப்பட்டு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு படகு வெளி இணைப்பு இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கு அமைவாக நடத்திய தேடுதலின் போது பருத்தித்துறை அவ்வொள்ளை பகுதியில் உள்ள வீடென்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு பைகளில் காணப்பட்ட 46 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. இதன்போது அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவரும் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நால்வரையும் சான்றுப்பொருள்களையும் பருத்தித்துறை நீதவான் நீதி மன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)

32 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
1 hours ago