2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

2 சிறுவர்களிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

Editorial   / 2020 மே 13 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான, சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட ஆயுதப் பயிற்சி, மதபோதனைகள் என்பவற்றில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படும் 2 சிறுவர்களிடம் இன்று கோட்டை நீதவான் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளார்.


இந்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், இவர்கள் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.


14 மற்றும் 8 வயதான இந்த சிறுவர்களின் வாக்குமூலங்களை தமிழில் மொழிபெயர்க்க தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் சஹரானின் போதனைகளில் கலந்துகொண்ட 16 சிறுவர்களிடமிருந்து தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X