2025 ஜூலை 23, புதன்கிழமை

3 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன

Editorial   / 2025 ஜூலை 22 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்)சட்டமூலம், வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம்மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம்என்பன பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் 2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2016ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்கள் இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டன. இதற்கமைய வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) மீதான இரண்டாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 182 வாக்குகள் பதிவாகியதுடன், எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. குழுநிலையில் குறித்த சட்டமூலங்கள் ஆராயப்பட்டு மூன்றாவது மதிப்பீடு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 181 வாக்குகள் பதிவாகியதுடன், எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. இதற்கமைய வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி 181 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலத்தின் (2016ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 10 வாக்குகள் பதிவாகியதுடன், எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. இதனைத்தொடர்ந்து குறித்த சட்டமூலம் குழுநிலையில் ஆராயப்பட்டது. இதனையடுத்து மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதற்கு ஆதரவாக 181 வாக்குகள் பதிவாகியதுடன் எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. இதற்கு அமையவரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2016ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) 181 மேலதிக வாக்குகளால் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர், வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .