2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

;35,232 PCR பரிசோதனைகள்’

Editorial   / 2020 மே 11 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம், ஆதார வைத்தியசாலைகள், பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்கள் அனைத்திலும், மார்ச் மாதம் 18ஆம் திகதி முதல், 35,232 PCR பரிசோதனைகள்  முன்னடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த PCR பரிசோதனைகள், கொவிட்-19 நோயாளர்களிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவுவதைத் தடுத்தது என்றும் புதிய நோயாளர்களை இனங்காண்பதற்கு உதவியாக அமைந்தது என்றும் கூறிய அவர், இது, 100 சதவிதம் சரியானதாக இருந்தது என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, சனிக்கிழமை (09) அன்று, நாடளாவிய ரீதியிலுள்ள தனிமைப்படுத்தல் மய்யங்களில் இருந்து 500 பேர் விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X