2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

5,000 ரூபாய் கொடுப்பனவு மே 11 முதல்

Editorial   / 2020 மே 05 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு இரண்டாம் கட்டமாக வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ, கிராம சேவையாளர்கள் வீடுகளுக்கே சென்று கொடுப்பனவுகளை வழங்கவுள்ளனர். 

கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை  மே 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 15ஆம் திகதி நிறைவுசெய்யப்படவுள்ளது.


பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (04) நடைபெற்ற கலந்துரையாடலில் பின்வருமாறு கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

முதியோர்களுக்கான கொடுப்பனவு
நூறு வயது பூர்த்தியான முதியோர் கொடுப்பனவு – தேசிய முதியோர் செயலகத்தின் மூலம்

அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு
சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு – அங்கவீனமுடையவர்களுக்கான தேசிய செயலகம்
விவசாயிகளுக்கான ஓய்வூதியம்
மீனவர்களுக்கான ஓய்வூதியம் – விவசாய காப்புறுதி சபையினால்
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X